பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற மலையாள கவியை ஒரு சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகன் என்ற அளவில் மாத்திரமே அறிமுகம். எங்களூர் எழுத்தாளரான ராம் தங்கத்தின் எழுத்துக்களை பிரசரித்த வம்சி புக்ஸ் நிறுவனம் வெளியிட்டதால் இந்த நூல் எனது வாசிக்கும் பட்டியலில் சேர்ந்தது. இதற்கு முன் Paulo Coelho வின் The Alchemist மற்றும் கல்பட்டா நாராயணன் போன்ற சிலரின் மொழி பெயர்ப்புகளையே படித்துள்ளேன் . இதனை படித்து முடிக்கையில் Florida- வின் Miami நகரத்திலிருந்து Costa Rica- வின் Liberia வை நோக்கிய விமான பயணத்தில் பறந்து கொண்டிருந்தேன். படிக்க படிக்க மனித வாழ்க்கையின் மகோன்னதமான சில அனுபவங்களை, நேர்மையும், தன்னிலை சறுக்கல்களை மறைக்காத உண்மை உணர்வும் மேலோங்கிய கவி நேர்த்தி மிக்க கட்டுரைகளில் கரைந்து போனேன். Dr Paul Kalanithi- யின் When Breath Becomes Air - க்கு பிறகு, ஒரு நூலை படித்து என் கண்கள் குளமாகி போகும் உணர்ச்சி மேலிட்ட மனோநிலையில் ததும்பி வழிந்தேன். வானூர்தியின் சாளரத்துக்கு பக்கத்திலமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியை தாண்டி வெளியே பார்க்கைய...
I open my mouth to let the world know the depth of my ignorance