ஏன்
எந்த விளையாட்டு உபகரணமும் என் கையாடலில் உடைந்து
அல்லது கிழிந்து போகின்றன?
1. சிறு
வயதில், சுசீந்திரம் கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் கிரிக்கெட் bat உடைந்து போயிற்று
2. கிட்டத்தட்ட
நாற்பதை நெருங்கும் வயதில், கனடாவில் குடியேறிய பொழுதில் நண்பர் கார்த்தியுடன் ஆவேசமான டென்னிஸ் ஆட்டத்தில் (ஒற்றயர் ஆட்டம் - எனக்கோ , நண்பருக்கோ விசேஷ டென்னிஸ் பயிற்சி
எதுவும் வாய்த்திருக்க வில்லை) டென்னிஸ் Racquet -ஐ உடைத்தாயிற்று
3. சில
மாதங்களுக்கு முன்பு விலைகூடிய Badminton Racuqet ஒன்றை உடன் விளையாடும் நண்பரோடு
விளைந்த எதிர்பாரா முட்டலில் (collission) உடைத்தாயிற்று
4. சில
தினங்களுக்கு முன் Costa Rica- வின் Tamarindo பசிபிக்
கடற்கரையின் மிதமான அலைகளில் உருண்டு புரண்டு ஓடிக் களிக்கையில் ஏன் நீச்சல் கால்
சட்டை கிழிந்து போயிற்று. பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி ஏதோ
Bollywood காதல் ஜோடிகளைக் கண்ணுற்ற வட இந்திய பத்திரிகையாளனை போல தாராளமாக
படம் பிடித்து கொண்டாடினாள் . (புகைப்படம் கீழே )
எந்த
வினைக்கும் தன் இயலாமையை
, திறனின்மையை ஒப்புக் கொள்ள விடாத மனது, இப்பொருட்கள் தரமற்றவை என்றும், சீனாவின் உற்பத்தி தரக் குறைவின் சான்றுகள்
என்றும் குறை கூறியது.
என் உளமனத்தில் மட்டும் சிறு வயதில் எப்போதெல்லாம் சொதப்பலான காரியங்களை செய்து விட்டு மற்றவர்களை அல்லது மற்றவற்றை பழிக்கிறேனோ, அப்போதெல்லாம் தாத்தா மீண்டும் மீண்டும் என்நோக்கி உமிழும் ஆங்கில வாசகம் நினைவுக்கு வந்து பெருங்கவலை கொள்ளச் செய்தது
“Bad
workmen, blame their tools”
(இன்னும்
சில பதிற்றாண்டுகளில் இந்த #நீந்திக்கிழித்தல் எனும் நிகழ்வு trending ஆகும் என்ற அபார நம்பிக்கையோடு ட்விட்டரில் இதைப் பதிவிடுகிறேன் )
Comments