Skip to main content

Posts

சிதம்பர நினைவுகள் – வாசிப்பனுபவம்

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற மலையாள கவியை ஒரு சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகன் என்ற அளவில் மாத்திரமே அறிமுகம். எங்களூர் எழுத்தாளரான ராம் தங்கத்தின் எழுத்துக்களை பிரசரித்த வம்சி புக்ஸ் நிறுவனம் வெளியிட்டதால் இந்த நூல் எனது வாசிக்கும் பட்டியலில் சேர்ந்தது. இதற்கு முன் Paulo Coelho வின் The Alchemist மற்றும் கல்பட்டா நாராயணன்   போன்ற சிலரின் மொழி பெயர்ப்புகளையே படித்துள்ளேன் . இதனை படித்து முடிக்கையில் Florida- வின் Miami நகரத்திலிருந்து Costa Rica- வின் Liberia வை நோக்கிய விமான பயணத்தில் பறந்து கொண்டிருந்தேன்.   படிக்க படிக்க மனித வாழ்க்கையின் மகோன்னதமான சில அனுபவங்களை, நேர்மையும், தன்னிலை சறுக்கல்களை மறைக்காத உண்மை உணர்வும் மேலோங்கிய கவி நேர்த்தி மிக்க கட்டுரைகளில் கரைந்து போனேன். Dr Paul Kalanithi- யின் When Breath Becomes Air - க்கு பிறகு, ஒரு நூலை படித்து என் கண்கள் குளமாகி போகும் உணர்ச்சி மேலிட்ட மனோநிலையில் ததும்பி வழிந்தேன். வானூர்தியின் சாளரத்துக்கு பக்கத்திலமர்ந்து    சினிமா பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியை தாண்டி வெளியே பார்க்கைய...
Recent posts

நீந்திக் கிழித்தல்

  ஏன் எந்த விளையாட்டு உபகரணமும் என் கையாடலில் உடைந்து அல்லது கிழிந்து போகின்றன ?   1. சிறு வயதில் , சுசீந்திரம் கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் கிரிக்கெட் bat உடைந்து போயிற்று 2. கிட்டத்தட்ட நாற்பதை நெருங்கும் வயதில் , கனடாவில் குடியேறிய பொழுதில் நண்பர் கார்த்தியுடன் ஆவேசமான டென்னிஸ் ஆட்டத்தில் ( ஒற்றயர் ஆட்டம் - எனக்கோ , நண்பருக்கோ விசேஷ டென்னிஸ்   பயிற்சி எதுவும் வாய்த்திருக்க வில்லை ) டென்னிஸ் Racquet - ஐ     உடைத்தாயிற்று 3. சில மாதங்களுக்கு முன்பு விலைகூடிய Badminton Racuqet ஒன்றை உடன் விளையாடும் நண்பரோடு விளைந்த எதிர்பாரா முட்டலில் (collission) உடைத்தாயிற்று 4. சில தினங்களுக்கு முன் Costa Rica- வின் Tamarindo   பசிபிக் கடற்கரையின் மிதமான அலைகளில் உருண்டு புரண்டு ஓடிக் களிக்கையில் ஏன் நீச்சல் கால் சட்டை கிழிந்து போயிற்று . பார்த்துக் கொண்டிருந்த   என் மனைவி ஏதோ Bollywood காதல் ஜோடிகளைக் கண்ணுற்ற வட இந்திய பத்திரிகையாளனை போல தாராளமாக படம் பிடித்து கொண்டாடினாள் . ...

நாகர்கோயில் சுதர்சன் ஜவுளிக் கடையிலிருந்து சுரா எனும் இலக்கிய பேராண்மை

(பேராண்மை = prowess அல்லது அருந்திறம் என்ற பொருள் கொள்க)   நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு (Tower Junction) எனது சிறுவதிலேயே பரிச்சயமான ஒன்று . அங்குள்ள சுதர்சன் ஜவுளி கடையும் மிகப் பரிச்சயமான ஸ்தாபனம் . எனது 44 - ஆவது வயதில் எனை ஒரு புதிய தமிழிலக்கிய வாசகன் என சொல்லிக்கொள்ளக் கூச்சப்பட வைக்கும் விஷயம் , சுதர்சன் உரிமையாளர் மற்றும் தமிழ் கூறும் நல்லுலகின் இலக்கிய பேராற்றல் , நவீன படைப்பிலக்கிய மேதை , சிந்தனையாளர் காலம் சென்ற சுந்தர ராமசாமி அவர்களை தெரியாமலிருந்ததும் அவரின் படைப்புகளில் ஒன்றைக் கூட அறியாமலிருந்தும் தான் .   சுரா பற்றிய ஜெயமோகனின் பேச்சுக்களை கேட்ட பிறகு ஒரு புளியமரத்தின் கதை நாவலை வாங்கி படித்தேன் . சொல்லத்தகுந்த சிந்தனை நீட்சிகளையோ   படைப்பிலக்கியவாதியின் அனுபவத்தைக் வாசகனுக்கு கடத்தும் வித்தையையோ அந்த வாசிப்பனுபவம் எனக்கு தர வில்லை என்ற போதிலும் இது ஒரு சாதாரண , எனக்கு இது வரையிலும் பரிச்சயமான மொழி நடையையோ கதையின் களத்தை , அது நடந்த காலச்சூழலை , அதன் கதாபாத்திரங்களை ...

Dubai - November 2022

  As I landed onto Terminal 3 of Dubai international airport, the first impression I got off the enormous facility was that it’s sheer size and scale, which is quite obvious when you walk into the world’s second largest building by usable floor space. What I didn’t know then is that Dubai airport is the world’s busiest in terms of volume of international passengers that fly by. I have actually flown through Dubai almost 13 years ago when I had a transit stop in this airport, but I failed to notice the vastness of the facility possibly because I was tired from a 13 hour flight from Toronto. Another interesting observation (purely anecdotal) was 3 out of every 5 staff members at the airport seem to belong to a south Asian(India, Sri Lanka, Nepal, Pakistan, Bangladesh) lineage and I noticed that there is abundance of workforce engaged in the upkeep of the airport, I even felt that they were overstaffed at times. Later I learnt that the airport contributes to over 25% of the Emirate’s ...

அணிலாடும் முன்றில் - நா முத்துக்குமார்

நா முத்துக்குமார் சினிமா பாடல்கள் வழியே பரிச்சயமான ஒரு கவிஞர். அவருடைய இலக்கிய படைப்புகளின் மீது எனக்கு மிக குறைவான ஈர்ப்பே இருந்து வந்தது. நாஞ்சில் நாடன் மற்றும் பவா செல்லத்துரை ஆகிய ஆளுமைகளின் சுட்டிக்காட்டல்கள் மூலம் முத்துக்குமாரின் படைப்புகளை தேடும் முயற்சியில் இறங்கினேன். டொரோண்டோ பொது நூலகங்கள் எதுவும் அவரின் படைப்புக்களை கொண்டிருக்க வில்லை. நாகர்கோவில் செந்தரம் bookstore பெருமாள் அவர்களை தொடர்பு கொண்டு சில புத்தகங்களை வரவழைத்தேன்.  அணிலாடும் முன்றில் மிக நேர்த்தியான நேர்மையான படைப்பு. மத்தியதர குடும்பங்களில் உலா வரும் உறவுகளை காஞ்சிபுர மாவட்ட வாசனை வீச உணர்வும் உண்மையும் அங்கங்கே கவித்துவம் ததும்ப பேசும் நேர்த்தி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவதோடு நம் குடும்ப உறவுகளையும் மனிதர்களையும் நினைவுக்கு கொண்டு வந்து விடுகிறது . மீண்டும் முத்துக்குமாரின் படைப்புகளை தேடி படிக்கும் ஆர்வத்தையும், 41 வயதுக்குள் காலம் களவாடிவிட்ட ஆற்றல்மிக்க தமிழ் படைப்பாளியை இழந்துவிட்ட ஆதங்கத்தையும் அளிக்கிறது இந்த வாசிப்பனுபவம்.

A farewell after 18 years, 11 months & 7 days.

  I remember vividly. It was a scorching summer afternoon in Chennai back in 2003, my friend and ex-colleague Sangeetha called me up. She just moved into TCS, a dream IT Services company for many Indian engineers, not just for the career prospects if offers but also due to its highly regarded and prestigious parent conglomerate, the Tata Group. Though TCS was a large Indian IT services firm, it was not in the limelight then as it was not a public listed company like its listed rivals like Infosys, HCL and Wipro.   Sangeetha told me that TCS is starting a new project to digitize the clinical functions and operations of a world-famous Ophthalmology Research Centre in Chennai including the patient medical records. The chosen technology platform was Microsoft .net and the solution includes the Microsoft Tablet PC interface. They are hiring Development Engineers and Lead Engineers to join the team, which sounded so lucrative to me as I was a big Microsoft admirer and have invested ...